Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  29-01-2021

இன்றைய தியானம்(Tamil)  29-01-2021

வாய்ப்பு

“இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.” – உபாகமம் 30:15 

பில்கேட்ஸ் உலக பணக்காரப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் என்பது நமக்குத் தெரியும். அவரிடம் பேட்டி காண பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் உலகப் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கிறீர்களே உங்கள் வெற்றிக்கான காரணம் என்ன என்று கேட்டார். உடனே பில்கேட்ஸ், ஒரு பேப்பரை அவர் கையில் கொடுத்து “உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நிரப்பிக் கொள் நான் தருகிறேன்” என்றார். அந்தப் பத்திரிக்கை நிருபர் எனக்கு எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டார். அதற்கு பில்கேட்ஸ், “நீ எவ்வளவு எழுதியிருந்தாலும் கொடுத்திருப்பேன், ஆனால் நீ கேட்கவில்லை உனக்கு கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டாய். நானோ உன்னைப் போல் எனக்கு கிடைத்த வாய்ப்பை இழக்கவில்லை, சிறிய வாய்ப்பாக இருந்தாலும் பயன்படுத்திக் கொண்டேன். இதுவே என்னுடைய வெற்றிக்கான காரணம்” என்றாராம். 

வேதத்திலே ஏசா தனக்கு இருந்த வாய்ப்பை அலட்சியம் பண்ணினான். அதனால் அவனுக்கு வரவேண்டிய சேஷ்ட புத்திர பாகத்தை இழந்து போனான். சேஷ்ட புத்திர பாகம் என்பது இரட்டிப்பான சுதந்தரமாகும். அவனுக்கு இருந்த பசியினால் சாதாரண கூழ்கூட பளபளப்பாய்த் தோன்றியது. இதனால் தன் சொத்தை இழந்தான். ஏசா பின்பு சத்தமிட்டு கதறினாலும் அழுதாலும் அவனுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவன் சகோதரன் யாக்கோபு ஒன்றுமில்லாதவனாக வெறும் கோலும் கையுமாக தன் மாமனாரிடம் சென்றார். அங்கு கிடைத்த அத்தனை வாய்ப்பையும் பயன்படுத்தி இரு பரிவாரங்களைச் சம்பாதித்தான். இன்று வரை அவன் சந்ததிகள் பூமியில் ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனி தேசமே உருவானது. அந்த சந்ததியிலே இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும் பிறந்தார். 

அன்பான வாலிபனே! உனக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் இழந்து விடாதே. தனக்கு கிடைத்த வாய்ப்பு சிறியதோ, பெரியதோ அதை பயன்படுத்தியவர்களே ஆசீர்வதிக்கப்படுகின்றனர். கல்லூரியிலோ, குடும்பத்திலோ, ஊழியத்திலோ உனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தயங்காமல் ஏற்றுக்கொண்டு ஜெபித்து பயன்படுத்துங்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தும் போது, எதை உனக்கு மிகச் சிறப்பாக செய்யமுடிகிறதோ அதுவே தேவன் உனக்கு கொடுத்த தாலந்து. உன் தாலந்து என்ன என்பதை கண்டுகொள்ள இதுவே வழி. சோம்பேறித்தனமும், உலக ஆசையும் உன் கடின உழைப்பை தடுத்துவிட இடம் கொடாதே. குறிப்பாக, உனக்கிருக்கும் தாலந்து தேவ நாம மகிமைக்காகவே பயன்பட வேண்டும் என்பதில் மிக கவனமாயிரு. “இயேசுவுக்காக எதையும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் இயேசுவை இழந்துவிடாதே” 
-    J. டேவிட் 

பைபிள் காலேஜில் மாணவர்கள் அமர்ந்து படிக்க சேர்கள் வாங்கப்பட ஜெபியுங்கள்.  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)